காயிதே மில்லத்தின் பிறந்த நாள்- முதல்வர் விஜய் மரியாதை
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 131- வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரசு சார்பில் மரியாதை
Quaid-e-Millath's Birth Anniversary


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 131- வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காயிதே மில்லத்தின் நல்லிணக்கத்தையும் புகழையும் சேர்க்கும் வகையில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

அதேபோல் நூலகத்திற்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (05/06/2026) சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கக்கூடிய வாலாஜா பெரிய பள்ளிவாசல் துயிலிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b