Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 05 ஜூன் (ஹி.ச.)
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
வரும் பக்தர்கள் கோவில்களில் உள்ள உண்டியல்களில் காட்சிக்கு செலுத்தி செல்வது வழக்கமாகும். கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கமாகும்.
இதனைத் தொடர்ந்து இன்று கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ராமநாதசுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் பெறப்பட்டு எண்ணப்பட்டது.
இப்பணியில் கோவில் ஊழியர்கள், தஞ்சாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
ஒருநாள் முழுவதும் உண்டியல் காணிக்கை எண்ணி முடிக்கப்பட்டத்தில் 1,72,97,286 ரூபாய் பணம், 32 கிராம் தங்கம், 2 கிலோ 200 கிராம் வெள்ளி, 138 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN