சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) சென்னை ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பல முக்கிய விரைவு மற்றும் மெயில் ரயில்களின் சேவைகள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகளின்
சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக  முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கம் -  தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

சென்னை ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பல முக்கிய விரைவு மற்றும் மெயில் ரயில்களின் சேவைகள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தடத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பின்படி, நாளை பகல் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் வைகை விரைவு ரயில், வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நாளை பகல் 1.15 மணிக்கு திருச்சியில் இருந்து ஜோத்பூர் நோக்கி புறப்படும் 20462 எண் கொண்ட விரைவு ரயில், தனது பயண வழியில் 90 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ஹௌராவில் இருந்து சென்னை வரும் 12839 எண் கொண்ட சென்னை மெயில், ஜூன் மாதம் 6, 9, 13, 16, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வழித்தடத்தில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது.

ஷாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் 22642 எண் கொண்ட விரைவு ரயில், ஜூன் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 55 நிமிடங்கள் காலதாமதத்தை சந்திக்கும்.

இதுதவிர, காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் 6721 எண் கொண்ட மெமு ரயில், ஜூன் 23ஆம் தேதி அன்று மட்டும் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் 22644 எண் கொண்ட விரைவு ரயிலும் ஜூன் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வழித்தடத்தில் 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட தேதிகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ளுமாறும், ரயில்களின் இயக்க நிலவரத்தை தேசிய ரயில் விசாரணை அமைப்பு அல்லது 139 என்ற எண்ணின் மூலம் தெரிந்துகொண்டு பயணத்தை திட்டமிடுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது

Hindusthan Samachar / vidya.b