ஜூன் 18-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன்
Legislative Assembly session on June 18


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 18-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூடும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை அரசின் கொள்கை விளக்கமாக அமையும் என்பதால், இந்தக் கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தொடரின் அலுவல் நாட்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு பின்னர் அடுத்த 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள்.

தொடர்ந்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பட்ஜெட்டில், த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b