Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ஆம் தேதி பதவியேற்றது.
தொடர்ந்து 21ஆம் தேதி 23 அமைச்சர்களும், 22ஆம் தேதி இரு அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்தும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P