வாங்க கற்றுக்கொள்வோம் தீ பாதுகாப்பு பயிற்சி - பொதுமக்களுக்கு அழைப்பு
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காக்கும் பணி எங்கள் பணி என்ற உயரிய நோக்கத்துடன் பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தீ விபத்துகள் மட்டுமின்றி, வெள்ளம், புயல், ந
Fire


Hh


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காக்கும் பணி எங்கள் பணி என்ற உயரிய நோக்கத்துடன் பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தீ விபத்துகள் மட்டுமின்றி, வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அவசர சூழல்களிலிருந்தும் மக்களை காப்பாற்றுவது இத்துறையின் முக்கிய பொறுப்பாகும்.

பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு வாங்க கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இதற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து,

தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டும் வாங்க கற்றுக்கொள்வோம் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 385 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் தங்களது அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது. இதில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ