முதல்வர் ரேவந்த் ரெட்டி உருவப்பொம்மை எரிப்பு - பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்
நாகர்கர்னூல், 05 ஜூன் (ஹி.ச.) தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பாலமூர் பகுதி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, நாகர்கர்னூல் மாவட்டம் திம்மாபேட்டில் பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலமூர் பகுதியை காங்கிரஸ் அரசு புறக்கணித்து வரு
A


நாகர்கர்னூல், 05 ஜூன் (ஹி.ச.)

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பாலமூர் பகுதி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, நாகர்கர்னூல் மாவட்டம் திம்மாபேட்டில் பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலமூர் பகுதியை காங்கிரஸ் அரசு புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டிய பிஆர்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உருவப்பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், “முதல்வரே பதவி விலகு” என கோஷமிட்டனர்.

முதல்வரின் வருகைக்கு முன்னதாக பிஆர்எஸ் முக்கிய தலைவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்ததை கண்டித்து கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் முதல்வர் வருகை தருவது அரசின் தோல்வியை காட்டுவதாக பிஆர்எஸ் தலைவர்கள் விமர்சித்தனர்.

பாலமூர் பகுதியில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,முந்தைய பிஆர்எஸ் அரசு தொடங்கிய திட்டங்களையே மீண்டும் திறந்து வைத்து விளம்பரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

பாலமூர்–ரங்காரெட்டி உயர்த்துப் பாசனத் திட்டப் பணிகள் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுவதாகவும், இதற்கு எதிராக விரைவில் பெரிய அளவிலான பாதயாத்திரை நடத்தப்படும் என்றும் பிஆர்எஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது சில பிஆர்எஸ் நிர்வாகிகளை போலீசார் காவலில் எடுத்தனர்.

இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA