Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 05 ஜூன் (ஹி.ச.)
ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் நடைபெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், வினுகொண்டா முன்னாள் எம்எல்ஏவும் ஒய்எஸ்ஆர்சிபி முன்னாள் தலைவருமான போலா பிரம்மநாயுடுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில காலமாக தலைமறைவாக இருந்த அவரை தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிபேட்டை மற்றும் நர்சிங்கி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான மதிப்புமிக்க நிலங்களை போலியான அரசு உத்தரவுகள் (GOs) தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நில மோசடியின் மதிப்பு சுமார் ரூ.1500 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலா பிரம்மநாயுடுவின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரை ஹைதராபாத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA