பாஜகவும் அண்ணாமலையும் வேறல்ல – திருமுருகன் காந்தி விமர்சனம்
சென்னை, 05 ஜூன் (ஹி ச.) பாஜக மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், பாஜக என்பது பெருச்சாளி என்றால் அதன
Thiru


Jj


சென்னை, 05 ஜூன் (ஹி ச.)

பாஜக மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

பாஜக என்பது பெருச்சாளி என்றால் அதன் குட்டி மட்டும் ஆட்டுக்குட்டியாக இருக்க முடியாது. அண்ணாமலையின் அரசியல் எவ்வாறு மதச்சார்பற்றதாகவும், சாதி சார்பற்றதாகவும் இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அண்ணாமலை வளர்த்தது சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியல்தான். அவரது கட்சியும் அதையே முன்னெடுக்கும். ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரில் வளர முடியாது என்பதை உணர்ந்ததாலேயே, 1980களில் ராமகோபாலனை முன்வைத்து 'இந்து முன்னணி' உருவாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இந்து முன்னணிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அதேபோன்று தற்போது அண்ணாமலையை முன்னிறுத்தியுள்ளனர். இதன் விளைவாக தமிழ்நாட்டின் மிக மோசமான அரசியல் கட்சியாக இது உருவெடுக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ