இயற்கையைப் பாதுகாக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது - உலக சுற்றுச்சூழல் நாள் இன்று
தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.) உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) ஆண்டுதோறும் ஜூன் 5 இன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்களைப் போக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் மக்களிடையே விழிப்புண
ல


தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.)

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) ஆண்டுதோறும் ஜூன் 5 இன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்களைப் போக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

1972 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த மனித சுற்றுச்சூழல் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் அவையால் (UN) இந்நாள் அறிவிக்கப்பட்டது.

முதல் கொண்டாட்டம்:

1973 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரே ஒரு பூமி (Only One Earth) என்ற கருப்பொருளோடு இந்தத் தினம் கொண்டாடப்பட்டது.

தலைமை அமைப்பு:

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) இந்த உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்து நடத்துகிறது.

தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல் நினோ தன்மை உருவாக்கக்கூடும் என்றும் உலக வானிலையியல் அமைப்பு அறிவித்துள்ளது.

பெய்யக்கூடிய மழையும் சீராக இல்லாமல் தீவிரமாகச் சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்துவிடும் வாய்ப்பும் அதிகமிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் உணவு உற்பத்தியும் பாதிப்படைந்தால் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

முன்னெப்போதையும் விட இந்த சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை விட கவலைகளையே அதிகரித்துள்ளது.

கால நிலை மாற்றம் நேரடியாக வறட்சியையும் பெருமழையையும் உண்டாக்கும், ஆனால், அதன் மறைமுகமான தாக்கம் வறுமை, இடப்பெயர்வு, வன்முறை உள்ளிட்ட கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மாள் முடிகிற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.

Hindusthan Samachar / Durai.J