அண்ணாமலை விலகல் தமிழக பாஜகவை பாதிக்காது - நயினார் நாகேந்திரன்
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது. இந்த நிலையில் பா
அண்ணாமலை விலகல் தமிழக பாஜகவை பாதிக்காது -  நயினார் நாகேந்திரன்


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார்.

அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது.

இந்த நிலையில் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியிருப்பது தமிழக பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என அக்கட்சியின் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறுகையில்,

பா.ஜ.க. என்பது நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. இது சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட கட்சி. அண்ணாமலை விலகல் தமிழக பாஜகவை பாதிக்காது.

பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டிற்குப் போனாலும், தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ் மக்களின் பெருமைகளைப் பற்றியும் பேசுகிறார்.

தமிழ் செப்பேடுகளை மீட்டு வந்திருக்கிறார்.

தமிழ் மக்கள் மீது பா.ஜ.க. என்றும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.

அது ஜனநாயக உரிமை. அண்ணாமலை தொடங்கிய இயக்கம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b