Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச)
காயிதே மில்லத்தின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அவரை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்த நினைவிடம் அருகே வந்த போது, திமுக - காங்கிரஸ் ஆதரவாளர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறுகையில்,
வருகிற ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணியின் மாநாட்டில் திமுக கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு அக்கட்சியின் முடிவு.
அதில் எனக்கு கருத்து கூற முடியாது.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும் இடத்தில் ஏற்பட்டது வெறும் குழப்பமே.
இந்த விவகாரத்தை மேலும் கூர்மைப்படுத்த விரும்பவில்லை.
நீண்ட கால கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் சங்கடம் இருக்கத்தான் செய்யும் என்று கூறினார்.
மேலும் இண்டியா கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ள நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்குமா ? என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
பதிலளித்த செல்வப்பெருந்தகை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யும், தமிழக குழு இதில் முடிவு எடுக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / vidya.b