மக்களை ஏமாற்றுவதில் மட்டுமே விஜய் அண்ணாவிற்கு திறமை உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை, 05 ஜூன் (ஹி.ச.) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு கால அவ
Rb


மதுரை, 05 ஜூன் (ஹி.ச.)

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்

ஆர்.பி. உதயகுமார்,

தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு கால அவகாசம் வழங்கலாம்.

ஆனால் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துவதில் ஒரு நாள் கூட தாமதம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகளை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களை ஏமாற்றுவதில் மட்டுமே விஜய் அண்ணாவிற்கு திறமை உள்ளது.

அவரது ஆட்சியில் இன்னும் தமிழகத்தில் என்னென்ன நடக்கப் போகிறது என்பது தனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது.

காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என விமர்சித்தார்.

அமைச்சர் ஸ்ரீநாத் பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததை குறிப்பிட்ட அவர்,

ஓட்டு போட்ட மக்களுக்கு தங்கள் சட்டமன்ற உறுப்பினர் யார் என்று தெரியாது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் யார் என்று தெரியாது.

தொகுதி எது என்பதும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதான் அவர்கள் கூறிய மாற்றமா? என்று கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / P YUVARAJ