கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
தென்காசி, 06 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சங்கரன்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் குருக்கள்பட்டி அருகே நள்ளிரவு நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இர
Accident


தென்காசி, 06 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே

சங்கரன்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் குருக்கள்பட்டி அருகே நள்ளிரவு நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த குருக்கள்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மறுக்காலங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பனவடலிச்சத்திரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் தொடர்புடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது, வாகனங்கள் எந்த வேகத்தில் சென்றன, ஓட்டுநர்களின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குருக்கள்பட்டி மற்றும் மறுக்காலங்குளம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவம் தொடர்பாக பனவடலிச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN