பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர் ...!
திண்டுக்கல் ,06 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேர
A


திண்டுக்கல் ,06 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேருந்தை கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.

திண்டுக்கல், வெள்ளோடு பிரிவை அடுத்த போக்குவரத்து நகர் அருகே மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கருப்புசாமிக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து டிரைவர் கருப்பசாமி பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்தை சாலையை விட்டு கீழே இறக்கி நிறுத்தினார்.

இதனால் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி தப்பினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA