₹78 லட்சம் டிஜிட்டல் மோசடி வழக்கு - முன்னாள் பயண நிறுவன மேலாளர் உட்பட 2 பேர் கைது
புதுடெல்லி, 07 ஜூன் (ஹி.ச.) புதுடெல்லியில் ₹78 லட்சம் தொடர்புடைய டிஜிட்டல் மோசடி வழக்கில், பயண நிறுவனத்தின் முன்னாள் குழு மேலாளர் உட்பட இருவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். எம்.பி.ஏ. பட்டதாரியான அந்த முன்னாள் மேலாளர், மீரட் பகுதியைச்
₹78 lakh digital fraud case


புதுடெல்லி, 07 ஜூன் (ஹி.ச.)

புதுடெல்லியில் ₹78 லட்சம் தொடர்புடைய டிஜிட்டல் மோசடி வழக்கில், பயண நிறுவனத்தின் முன்னாள் குழு மேலாளர் உட்பட இருவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர்.

எம்.பி.ஏ. பட்டதாரியான அந்த முன்னாள் மேலாளர், மீரட் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது அதே நிறுவனத்தில் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார்.

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை இவர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், டிஜிட்டல் மோசடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தொழில்நுட்ப ரீதியிலான தடயங்களை ஆராய்ந்ததில், பீகாரைச் சேர்ந்த வங்கிக் கணக்குதாரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரது வங்கிக் கணக்கில் ₹24 லட்சம் வரை பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மோசடி கும்பலிடம் தனது வங்கிக் கணக்கை ₹70,000-க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்ய குருகிராம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b