Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச)
பாரதிய ஜனதா கட்சியில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் தனித்துவமான பாதையை உருவாக்கும் நோக்கில் இது நம்ம இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.
இந்த புதிய அரசியல் அமைப்பு குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த இயக்கத்தில் தற்போது வரை 15 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர்.
இணையதளம் வாயிலாக மக்களை நேரடியாக இயக்கத்தில் இணைய அவர் விடுத்த அழைப்புக்கு பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.
டிஜிட்டல் தளத்தை மையமாக வைத்து உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்ததன் விளைவாக, 15 லட்சம் என்ற மைல்கல்லை இயக்கம் விரைவாக எட்டியுள்ளது.
உறுப்பினர் சேர்க்கையில் கிடைத்துள்ள இந்த வேகம், தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாக இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் இயக்கம் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b