மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது - அமைச்சர் சம்பத்குமார்
கோவை, 07 ஜூன் (ஹி.ச.) கோவை கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 47 வருடங்கள் கோவையில் வாழ்ந்துள்ளேன். கோவ
Minister Sambath kumar


கோவை, 07 ஜூன் (ஹி.ச.)

கோவை கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

47 வருடங்கள் கோவையில் வாழ்ந்துள்ளேன். கோவைக்கு தேவையானவற்றை கொண்டு வருவேன்.

கல்வி மருத்துவம் தொழில் துறையை வளர்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன்.

ஒவ்வொரு நாளும் கோவையை மேம்படுத்த கூடிய அனைத்து திட்டங்களையும் மேற்கொள்வேன். ஒவ்வொரு நாளாக அதனை பார்க்க போகிறீர்கள்.

முதலமைச்சரின் நம்பிக்கையை 100% நிறைவேற்றுவேன். கடந்த கால ஆட்சியில் தான் ஊழல் இருந்தது. அதனை பற்றி தான் திமுகவினர் கூறி வருகிறார்கள். நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பள்ளி கட்டணம் கண்காணிக்கப்படும். பெரியார் அறிவுலகம் கூடிய விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழக வெற்றி கழக முதல்வர் நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து- கையெடுத்து கும்பிட்டு இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆட்சி, மக்களின் செல்வாக்கை பெற்ற ஒரு தலைவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

திமுக தயவில் தான் இந்த ஆட்சி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இனி வரக்கூடிய காலங்களிலும் அவருடைய ஆட்சி தான் தொடரும் மக்களின் நம்பிக்கையே முழுமையாக பெற்று இருக்கிறோம்.

கோவை அரசு மருத்துவமனையில் இருதயவியல் துறையில் மருத்துவர் இல்லை என்று கூறி உள்ளனர்.

மருத்துவமனையில் அது குறித்து விசாரித்து விட்டு அதற்குரிய தேவைகள் முழுமையாக செய்வது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN