சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்க போர் காரணமாக இயற்கை எரிவாயு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னால் கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. அத
சிலிண்டர்


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்க போர் காரணமாக இயற்கை எரிவாயு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னால் கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. அதேபோல் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே தான் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென உயர்ந்திருக்கிறது.

இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 -ல் இருந்து மேலும் ரூ.29 உயர்ந்திருக்கிறது.

அதன்படி, தற்போது 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.957.50 ஆக விலை உயர்ந்திருக்கிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த 3 மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.89 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.46 உயர்த்தப்பட்டது.

தற்போது வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்றாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P