அவதூறு புகார்களுக்கு தனி மின்னஞ்சல் - திமுக தலைமைக் கழக அறிவிப்பு
சென்னை, 07 ஜூன் (ஹி.ச) கடந்த மே 25-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அதில், அரசின் நடவ
Arivalayam


Jn


சென்னை, 07 ஜூன் (ஹி.ச)

கடந்த மே 25-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து ஜனநாயக ரீதியில் கருத்துகளை பதிவு செய்வோர் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்தனர்.

அதேநேரத்தில், திமுக மற்றும் அதன் நிர்வாகிகள் குறித்து ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள் திமுக சட்டத்துறையை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகார்கள், ஆதாரங்கள் மற்றும் தகவல்களை அனுப்புவதற்காக தனி மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி: dmklegalwingcomplaints@gmail.com

மேலும், தேவையான சட்ட ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளுக்காக திமுக சட்டத்துறை சார்ந்த வழக்கறிஞர்களையும் தொடர்புகொள்ளலாம் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ