திமுகவில் இணைந்தார்- விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபுவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்தார். இதன் காரணமாக பனையூர் பாபு தலைமை மீது அதிருப்தி அடை
Former VCK MLA Panaiyur Babu joined the DMK


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபுவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்தார்.

இதன் காரணமாக பனையூர் பாபு தலைமை மீது அதிருப்தி அடைந்த நிலையில், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். இதனையடுத்து தேர்தல் முடிவிற்கு பிறகு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் மாற்றுக் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று (ஜூன் 07) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக மாநில ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். மேலும் அவர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிர மணியன், முன்னாள் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b