தென்காசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
தென்காசி, 07 ஜூன் (ஹி.ச.) தென்காசி பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
Four arrested for selling ganja in Tenkasi


தென்காசி, 07 ஜூன் (ஹி.ச.)

தென்காசி பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே மறைமுகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சிறிய பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கும்பலுக்கு கஞ்சா சப்ளை செய்த முக்கிய நபர்கள் யார், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய போதைப்பொருள் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b