Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 07 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட ஆட்சியர் பத்மஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
கல்வராயன் மலையில் இளைஞர்களை போதை மற்றும் தவறான கலாச்சார பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க விளையாட்டே சிறந்த தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்காக 5 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும், வெளிநாடுகளில் உள்ள மலைப்பகுதி விளையாட்டு மையங்களை முன்மாதிரியாகக் கொண்டு, தங்கும் விடுதி (ஹாஸ்டல்) வசதியுடன் விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்திய போதிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கல்வராயன் மலைப் பகுதிக்கு வரவில்லை என்றும், தற்போது அந்த நிலை மாறி வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam