திருச்சியில் நாளை பாஜக மாவட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, 07 ஜூன் (ஹி.ச.) தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை வகுப்பதற்காக, மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 08) திருச்சியில் நடைபெறவுள்ளது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்தக
Key consultative meeting of BJP district leaders in Trichy tomorrow


திருச்சி, 07 ஜூன் (ஹி.ச.)

தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை வகுப்பதற்காக, மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 08) திருச்சியில் நடைபெறவுள்ளது.

மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகம், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்பிலிருந்து வெளியேறியது தொடர்பான சூழல் மற்றும் கட்சியின் தற்போதைய களநிலவரம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், மாநிலம் முழுவதிலுமிருந்து மாவட்டத் தலைவர்கள், மாநில அணிப் பிரிவுகளின் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிவாரியான பலம், கூட்டணி நிலைப்பாடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அண்ணாமலையின் வெளியேற்றத்திற்குப் பிறகு மாவட்ட அளவில் தொண்டர்களிடையே நிலவும் மனநிலை, கட்சிப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டத் தலைவர்களிடம் கருத்துக் கேட்கப்படவுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமையின் கீழ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது, அணிகளை பலப்படுத்துவது மற்றும் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பது குறித்த செயல்திட்டமும் இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.

திருச்சியில் நடைபெறும் இந்தக் கூட்டம் தமிழக பாஜகவின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b