ஹைதராபாத்தில் லிஃப்ட் விபத்து - பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி உயிரிழப்பு
ஹைதராபாத், 07 ஜூன் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட லிஃப்ட் விபத்தில் 57 வயது பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராதா, ஹைதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில
லிஃப்ட்


ஹைதராபாத், 07 ஜூன் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட லிஃப்ட் விபத்தில் 57 வயது பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராதா, ஹைதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் தங்கி பேரனை கவனித்து வந்தார். சமீபத்தில் அந்த குடும்பம் கைரதாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்திருந்தது.

சம்பவத்தன்று 15 மாத பேரனை அழைத்துக்கொண்டு ஐந்தாவது தளத்திற்குச் சென்ற ராதா, பின்னர் கீழே வருவதற்காக லிஃப்ட் அருகே சென்றார். பார்வைக் குறைபாடு இருந்த நிலையில், லிஃப்ட் தளத்தில் இருப்பதாக நினைத்து கதவைத் திறந்துள்ளார்.

ஆனால் லிஃப்ட் அந்த தளத்தில் இல்லாத நிலையில், உள்ளே செல்ல முயன்றபோது ராதா மற்றும் அவரது பேரன் லிஃப்ட் ஷாஃப்டுக்குள் விழுந்தனர். இதில் ராதா பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ராதா ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த 15 மாத குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P