மணிமுத்தாறு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு - 3-வது நாளாக குளிக்க தடை
நெல்லை, 07 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியி
வெள்ளப்பெருக்கு


நெல்லை, 07 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அருவியில் குளிக்க வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே தடை விதித்திருந்தனர். தொடர்ந்து மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில் இந்த தடை மூன்றாவது நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீராகி நீர்வரத்து குறைந்த பின்னரே குளிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P