திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - அரசின் முடிவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்
சிபிஎம் சண்முகம்


தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில்,

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் உறுதியான நிலைப்பாட்டை அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் நிர்மல் குமார்,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன சூழ்நிலை இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. மதவாத சக்திகள் அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தை பயன்படுத்த முயன்றால் அதற்கு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்று தெரிவித்திருந்தார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டிற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam