விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கள்ளக்குறிச்சி, 07 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கராத்தே, வாலிபால், கூடை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும
Minister Aadhav Arjuna


கள்ளக்குறிச்சி, 07 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கராத்தே, வாலிபால், கூடை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துரையாடினார்

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்படவுள்ளவை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்

தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ள இடம் முழுவதும் நேரடியாக நடந்து சென்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்து விரைந்து மாவட்ட விளையாட்டு அரங்க பணிகளை தொடங்கி முடித்திடவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சருடன் தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டதால் அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் சுமார் 4 கோடி மதிப்பில் மாவட்ட நூலக கட்டுமான பணியினை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Hindusthan Samachar / ANANDHAN