செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி?
தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்க தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணிநியமனங்களு
செந்தில் பாலாஜி


தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்க தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011 முதல் 2016 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணிநியமனங்களுக்கு பணம் பெற்றதாக செந்தில்பாலாஜி மீது புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள புகாரை விசாரிக்க தேவையான அனுமதியை வழங்குமாறு தமிழக அரசு அண்மையில் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் புகாரை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநரின் அனுமதி குறித்த தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam