டாஸ்மாக் கட்டண வசூல் முறையில் மாற்றம் - அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல்
தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.) டாஸ்மாக் மதுபான விற்பனையில் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஹாட் மதுபான பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்
டாஸ்மாக்


தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.)

டாஸ்மாக் மதுபான விற்பனையில் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஹாட் மதுபான பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என்ற அடிப்படையில் வசூலிக்கப்பட்டு வந்த தொகைகள் இனி நேரடியாக அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசூல் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு தொகை வசூலிக்கப்பட்டு வந்ததாகவும், புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் அந்த வருவாய் நேரடியாக அரசுக்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அல்லது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Hindusthan Samachar / VINOTH KUMAR P