ஏரிகள்–அரசு நிலங்களை பணக்காரர்களும் ஆக்கிரமித்தால் என்ன சொல்லுவது? – முதல்வர் ரேவந்த் ரெட்டி..!
பெங்களூரு , 07 ஜூன் (ஜி.ச.) அரசு சொத்துகள் மற்றும் நீர்வளங்களை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ‘தி ஹிந்து ஹடில்’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,
T


பெங்களூரு , 07 ஜூன் (ஜி.ச.)

அரசு சொத்துகள் மற்றும் நீர்வளங்களை பாதுகாப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற

‘தி ஹிந்து ஹடில்’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என கூறினார்.

இதற்காக 2024 ஜூலையில் ஹைட்ரா என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000 பணியாளர்கள் மூலம் அரசு சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹைட்ரா

இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு மேற்பட்ட அரசு சொத்துகள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்பு செல்வாக்கு வாய்ந்தவர்கள் வில்லாக்கள், பண்ணை வீடுகளுக்காக ஏரிகளை ஆக்கிரமித்தனர். இப்போது அந்த நிலை இல்லை. ஏழைகள் ஆக்கிரமித்தால் ஒரு அளவு புரிந்துகொள்ளலாம். ஆனால் பணக்காரர்களும் ஆக்கிரமித்தால் என்ன சொல்லுவது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த ஈகிள் போர்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஈகிள் போர்ஸ்

கடந்த 15 மாதங்களில் 67,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றும், விரைவில் மேலும் 5,000 காவல்துறை பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA