சென்னை - திருப்பதி உட்பட 4 ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம் - இன்று முதல் செப்டம்பர் 6 வரை அமல்
சென்னை, 07 ஜூன் (ஹி.ச) பராமரிப்பு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - திருப்பதி மார்க்கம் உட்பட நான்கு முக்கிய ரயில் சேவைகளில் இன்று முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு
சென்னை - திருப்பதி உட்பட 4 ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம் - இன்று முதல் செப்டம்பர் 6 வரை அமல்


சென்னை, 07 ஜூன் (ஹி.ச)

பராமரிப்பு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - திருப்பதி மார்க்கம் உட்பட நான்கு முக்கிய ரயில் சேவைகளில் இன்று முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் ரயில், செப்டம்பர் 6-ம் தேதி வரை திருச்சானூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி வரை செல்லும் பயணிகள் திருச்சானூரில் இருந்து மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல், திருப்பதியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், இனி திருச்சானூரில் இருந்து மட்டுமே புறப்படும். திருப்பதியில் இருந்து பயணத்தை தொடங்கும் பயணிகள் திருச்சானூர் வந்து இந்த ரயிலில் ஏற வேண்டியிருக்கும்.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 09:50 மணிக்கு திருப்பதிக்கு செல்லும் தினசரி விரைவு ரயிலும் திருச்சானூர் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், செப்டம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தினசரி பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ரயில்வே உதவி மைய எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b