Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 07 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலை மோதி வருகிறது.
மேலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் குற்றாலம் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாற்று உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN