Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 07 ஜூன் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டு 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருவாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை மற்றும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 5.30 மணி அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர், இன்று காலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்போது சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்,
அதேபோன்று 50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், கோவில் நிர்வாகம் சார்பில் வருகின்ற பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர், நீர்மோர் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கிவ் லைன் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,
கோயில் நிர்வாகம் சார்பாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
கோயில் பணியாளர்கள் சார்பாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN