திருச்சியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை - சிசிடிவி காட்சிகளால் துப்பு துலக்கும் போலீசார்
திருச்சி, 07 ஜூன் (ஹி.ச.) திருச்சி மாநகரம் அரியமங்கலம் அருகே உள்ள அம்மா குளம் பகுதியைச் சேர்ந்த பாதுஷா என்கிற பாட்ஷா, மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகவும், போலீசா
கொலை


திருச்சி, 07 ஜூன் (ஹி.ச.)

திருச்சி மாநகரம் அரியமங்கலம் அருகே உள்ள அம்மா குளம் பகுதியைச் சேர்ந்த பாதுஷா என்கிற பாட்ஷா, மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகவும், போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்த பாட்ஷா, நேற்று இரவு அரியமங்கலம் அண்ணா நகர் வினோபாஜி தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழச் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியமங்கலம் போலீசார், பாட்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam