Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 07 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,
தமிழக அரசையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் தற்போது நடப்பது தூய ஆட்சி அல்ல, பித்தலாட்ட ஆட்சி. மாற்றத்தை விரும்பிய மக்கள் ஒரு பேராபத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளனர்.
இந்த ஆட்சியின் உண்மையான நிலையை மக்கள் விரைவில் உணர்வார்கள் என்று கூறினார்.
பாஜகவில் இருந்து விலகிய கே. அண்ணாமலை குறித்து பேசிய தினகரன்,
அண்ணாமலை எனக்கு அரசியலைக் கடந்து நல்ல நண்பர். அவர் பாஜகவில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது என்றார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதேபோல், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்ததாக தமிழக வெற்றிக் கழகம் மீது குற்றஞ்சாட்டிய அவர்,
இதுவரை தமிழக அரசியலில் இல்லாத வகையில் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகும் என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் விமர்சித்த தினகரன்,
என்ன பேசுவது என்று தெரியாமல் சில அமைச்சர்கள் பேசி வருகின்றனர்” எனக் கூறினார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்தது தவறு என்பதை உணரும் காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும் கவலை தெரிவித்த அவர்,
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமூக விரோதிகள் ஆட்சியைக் கண்டு அஞ்ச வேண்டும். வெறும் வசனங்கள் பேசுவதற்காக மக்கள் ஆட்சியை வழங்கவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam