விசிக மாநில செயலாளர் சங்கத்தமிழன் கட்சியிலிருந்து இடைநீக்கம்
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் (சங்கத்தமிழன்) கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன
சங்கத்தமிழன்


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் (சங்கத்தமிழன்) கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சங்கத்தமிழன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைமை குறித்து கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் வெளியிட்டதுடன், சமூக வலைதளங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு முரணான கருத்துகளை தொடர்ந்து பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவரது செயல்பாடுகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டும் எந்த மாற்றமும் ஏற்படாததால், கட்சியின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநீக்க காலத்தில் கட்சியின் நிகழ்ச்சிகள், போராட்டங்கள் மற்றும் பிற கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் சங்கத்தமிழன் பங்கேற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் விளக்கம் அளிக்கவோ அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவோ அவருக்கு உரிமை இருப்பதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P