Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 07 ஜூன் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.7.5 கோடி மதிப்பிலான சிறப்பு ஊதியம் மற்றும் ஒருமுறை கௌரவத் தொகை வழங்க புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல் பணிகளில் குறைந்தபட்சம் 81 நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அதேசமயம், குறுகிய காலத்திற்கு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒருமுறை கௌரவத் தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலத்தில் அயராது உழைத்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பு ஊதியம் மற்றும் கௌரவத் தொகைக்கான தகுதி வரம்புகள், வழங்கப்படும் தொகை விவரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b