எழுத்துப் போராளி ராமோஜி ராவுக்கு முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி
அமராவதி, 08 ஜூன் (ஜி.ச.) ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவர் மறைந்த ராமோஜி ராவின் 2-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கு இனத்தின
A


அமராவதி, 08 ஜூன் (ஜி.ச.)

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவர் மறைந்த ராமோஜி ராவின் 2-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தெலுங்கு இனத்தின் பெருமைக்குரிய மகத்தான மனிதரும், ஊடகத் துறையில் புதிய யுகத்தை உருவாக்கியவருமான ராமோஜி ராவ் ஒரு எழுத்துப் போராளி.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பாலும் தொலைநோக்கு சிந்தனையாலும் அசாதாரண உயரங்களை அடைந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடகத்தை மக்கள் விழிப்புணர்வுக்கான சக்திவாய்ந்த கருவியாக மாற்றிய அவரது சேவைகள் என்றும் மறக்க முடியாதவை.

ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் அவர் மேற்கொண்ட பயணம் வருங்கால தலைமுறைகளுக்கு உத்வேகமாக திகழும் என்றும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைத் துறை என்பது வெறும் வணிகம் அல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை தனது செயல்பாடுகளால் நிரூபித்தவர் ராமோஜி ராவ்.

தெலுங்கு மக்கள் பெருமைப்படும் ஊடக நிறுவனங்களை உருவாக்கிய அவரது இடம் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என்று சந்திரபாபு நாயுடு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA