மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது - பார்வையிட மட்டும் அனுமதி
திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்து
Ban on bathing for tourists at Manimutharu Dam continues


திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அணைப்பகுதியில் நீரின் வேகமும் ஆழமும் கூடியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி அணையை பார்வையிட மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் அணைப்பகுதியில் இறங்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து சீரான பின்னரே குளிப்பதற்கான தடை விலக்கப்படும் எனவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர் மழையால் மணிமுத்தாறு அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால், அதன் அழகை காண தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b