தவறான சிகிச்சையால் 10 வயது சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம் - இரு மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு
காரைக்குடி, 08 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் தம்பிரான் மருத்துவமனையில் தோல் நோய் காரணமாக சிகிச்சைக்காக 10 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த மே 29 ஆம் தேதி அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடத்த ந
Case registered against two doctors.


காரைக்குடி, 08 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் தம்பிரான் மருத்துவமனையில் தோல் நோய் காரணமாக சிகிச்சைக்காக 10 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கடந்த மே 29 ஆம் தேதி அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடத்த நிலையில் அதன் பின்னர் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அச்சிறுவன் வலியால் அவதிப்பட்டுள்ளான். இது குறித்து சிகிச்சை அளித்த சோமசுந்தரம் மற்றும் காமாட்சி சந்திரன் இருவரும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை காரணமாக அச்சிறுவனின் ஆணுறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றினால் மட்டுமே சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி அச்சிறுவனின் ஆணுறுப்பை அகற்றி அவனை காப்பாற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தவறான மருத்துவ நடைமுறைகள் மேற்கொண்ட மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் காமாட்சி சந்திரன் மீது சிறுவனின் தயார் காரைக்குடி ஏ.எஸ்.பி அலுவலத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரது புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை தொடர்பான பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் மருத்துவ அலட்சியங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b