வருகை இல்லா ஆவணப்பதிவு திட்டம் விரைவில் கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் ஆவணப்பதிவு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வருகை இல்லா ஆவணப்பதிவு திட்டம்’ விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பத
Contactless document registration scheme to become mandatory soon


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் ஆவணப்பதிவு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வருகை இல்லா ஆவணப்பதிவு திட்டம்’ விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பதிவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நவீன திட்டத்தின் மூலம், பொதுமக்கள் இனி சொத்து ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அதற்கு மாறாக, இணைய வழியிலேயே முழுமையாக ஆவணப்பதிவு செயல்முறையை மேற்கொள்ள முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை சார்பதிவாளர் இணையம் வாயிலாக பரிசீலித்து, ஒப்புதல் அளித்தவுடன், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் நகல் நேரடியாக வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பதாரரின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அலுவலகங்களில் காத்திருப்பு, தரகர்கள் தலையீடு மற்றும் காலவிரயம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், மக்களுக்கு நேரமும் பணமும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகை இல்லா ஆவணப்பதிவு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் 7397574067 மற்றும் 6369798973 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

விரைவில் இந்த நடைமுறை முழுமையாக கட்டாயமாக்கப்படும் என்பதால், பொதுமக்கள் இணையவழி பதிவு முறைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b