Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜூன் (ஹி.ச.)
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் ரூ.8,000 போதுமானதாக இல்லை என்றும், இதனால் மீனவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம், கோவா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், நிவாரணத் தொகை நிர்ணயம் என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடைய விவகாரம் என வாதிடப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam