Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
அந்த வகையில் நேற்று முன் தினம் ஜூன் 6ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070க்கும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.11,795க்கும் சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.94,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P