யாருடைய நிழலிலும் இருக்கக் கூடாது - நானாகவே இருக்க விரும்புகிறேன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்...!
மும்பை, 08 ஜூன் (ஜி.ச.) அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 போட்டித் தொடரில் பங்கேற்கிறது. இதில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலு
I


மும்பை, 08 ஜூன் (ஜி.ச.)

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 போட்டித் தொடரில் பங்கேற்கிறது.

இதில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றுள்ளார். மேலும், அவருக்கு அணியின் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது கேப்டன்சி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

கேப்டனாக இல்லாதபோது எப்படி இருந்தேனோ, அதேபோல் தொடர விரும்புகிறேன்.

யாருக்கும் மாற்றாகவோ, யாருடைய நிழலின் கீழோ இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

எனக்கு சவால் அளித்த அனைவரையும் வென்று முன்னேற வேண்டும் என்பதே எப்போதும் எனது மனநிலையாக இருந்தது.

அதே எண்ணத்துடன்தான் இனியும் செயல்படுவேன் என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA