Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 08 ஜூன் (ஹி.ச.)
கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேயர் மற்றும் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, கூட்டரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் சக்திவேல், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தையும் அருகில் வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல் காங்கிரஸ் கவுன்சிலர், கே. காமராஜர் அவர்களின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனால் கூட்டரங்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
புகைப்பட விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்கள் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நிலைமையை சீர்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam