நேபாள எல்லையில் TMC தலைவர் ஜஹாங்கீர் கான் கைது – மேற்கு வங்கத்தில் பரபரப்பு
கொல்கத்தா , 08 ஜூன் (ஹி.ச.) மேற்கு வங்க மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் (TMC) முன்னாள் தலைவர் ஜஹாங்கீர் கான், இந்தியா–நேபாள எல்லை அருகே சிறப்பு பணிக்குழு (STF) போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேர்தல் தொடர்பான ப
K


கொல்கத்தா , 08 ஜூன் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் (TMC) முன்னாள் தலைவர் ஜஹாங்கீர் கான், இந்தியா–நேபாள எல்லை அருகே சிறப்பு பணிக்குழு (STF) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேர்தல் தொடர்பான பல வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஜஹாங்கீர் கான், நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மீது தேர்தல் வன்முறை, பணம் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு (repoll) நடத்தப்பட்ட நிலையில், ஜஹாங்கீர் கான் முக்கிய சர்ச்சை மையமாக இருந்தார். இதன் பின்னர் அவர் மீது பல புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், வழக்கு விசாரணைக்காக போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, அவர் தலைமறைவாகி எல்லை வழியாக வெளியேற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, STF தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஜஹாங்கீர் கான் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அவர் முன்பு “புஷ்பா” திரைப்பட பாணியில் பேசியதாகவும், தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கைதுக்குப் பிறகு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA