முதலமைச்சர் விஜய் ஆட்சி குறித்து, மு.க.ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது - வீரபாண்டியன்
கிருஷ்ணகிரி, 08 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சியின் அண்ணாநகர், சுல்தான் பேட்டை, ஜீவாநகர், விருப்பாச்சி நகர் உள்ளிட்ட இடங்களில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவிலுக்கு சொந்தமான நிலத்த
Veerapandian MK Stalin


கிருஷ்ணகிரி, 08 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சியின் அண்ணாநகர், சுல்தான் பேட்டை, ஜீவாநகர், விருப்பாச்சி நகர் உள்ளிட்ட இடங்களில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக 1,027 வீடுகள் கட்டி 2 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை சார்பில் வீடுகளை அப்புறப்படுத்தி நோட்டீஸ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ இராமச்சந்திரன் தலைமையில் கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரப்பாண்டியன் பங்கேற்று உறையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தால் பேரூராட்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு வீப்பாண்டியன், எம்எல்ஏ இராமச்சந்திரன் ஆகியோர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரப்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

குடியிருக்கும் வீடுகளை இடிக்க மாட்டோம் என கொள்கை முடிவை எடுக்க இருப்பதாக தமிழக அமைச்சர்கள் கூறி உள்ளனர். முடிவு எட்டாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.

இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். தேச நலனுக்காக இந்தியா கூட்டணி வலிமை பெற வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் சில வெளியேறி ஆட்சியில் பங்கேற்று உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரித்து உள்ளோம். நாங்கள் கூட்டணியை தொடர்ந்தாலும், வெளியேறினாலும் நிர்வாகக் குழுவை கூட்டி முடிவெடுப்போம். இம்மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து எங்கள் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

தவெக ஆட்சி 3 மாதங்கள் தான் நீடிக்கும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, பல பொறுப்புகளில் இருந்த தமிழகத்தின் மூத்த அனுபவமிக்க தலைவர் ஸ்டாலின், அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்பது தான் சிபிஐ கருத்து.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் தேர்தலோ ஆளுநர் ஆட்சியோ வரக் கூடாது என்பதற்காக அதிக எண்ணிக்கையில் வென்ற தவெகவை வெளியிலிருந்து ஆதரித்து உள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதே முடிவு

மதச்சார்பின்மை, ஏழைகளுக்கான அரசாகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, நல்ல ஆட்சி கொடுத்த ஸ்டாலின் அவர்களின் திட்டங்களை தொடர்ந்தால் சிபிஐ ஆதரிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN