உலகத் தமிழ் மேம்பாட்டிற்க்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் இர.ந.வீரப்பன்
தமிழ்நாடு, 08 ஜூன் (ஹி.ச.) இர.ந.வீரப்பன் அவர்கள் உலகத் தமிழ் மேம்பாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு புகழ்பெற்ற மலேசியத் தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியர் ஆவார் பிறப்பு: அவர் 1930 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இலங்கையில் உள்ள நுவரெலியா
G


தமிழ்நாடு, 08 ஜூன் (ஹி.ச.)

இர.ந.வீரப்பன் அவர்கள் உலகத் தமிழ் மேம்பாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு புகழ்பெற்ற மலேசியத் தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியர் ஆவார்

பிறப்பு: அவர் 1930 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இலங்கையில் உள்ள நுவரெலியா பகுதியில் பிறந்தார்.

பின்னர் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து, இறுதியில் மலேசியாவில் குடியேறினார்.

பணி: மலேசியாவில் தமிழ் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழர் மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டார்.

படைப்புகள்: சிறுகதை, ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழி போராட்டம், உலகளாவிய தமிழ் பண்பாட்டு தொடர்புகள் என மலேசியத் தமிழர்களின் வரலாறு குறித்த பல நூல்களை எழுதியுள்ளார்.

பல துறைகளில் தொண்டாற்றியவர்.

அவற்றில் மலேசியத் தமிழர்கள் உள்ளிட்ட 43-க்கும் மேற்பட்ட நூல்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன

சாதனைகள்: உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் உறவு பாராட்டி, கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏறக்குறைய 43 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இவரைப் பற்றி தமிழ்நாட்டின் பாவலர் ஐயா கதிர் முத்தையனாரும், லண்டனை சேர்ந்த சுரதா முருகையனாரும் நூல்களை எழுதியுள்ளனர்.

இவர் தமிழ் உயர்வுக்காக தமிழ் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக தொண்டாற்றினார்.

மறைவு:இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்ட இர.ந.வீரப்பன் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J