Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜூன் (ஹி.ச.)
சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த காரணத்திற்காகவே மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அரசின் செயல்பாடுகள் குறித்த சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி மாற்றத்தை வாக்குறுதியாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசு, கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏமாற்றமளிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மாரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், காவல்துறையை பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் எந்த நடவடிக்கையையும் தமிழக பாஜக ஏற்காது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam